TSK - Bergen
முதியோர்களுக்கான ஒன்றுகூடல் 28.01.12
பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்படுள்ள முதியோர்களுக்கான ஒன்றுகூடல் 28.01.12 சனிக்கிழமை அன்று ஒழுங்கு செய்யப்படுள்ளது. இதில் கலந்து கொள்ள ஏற்கனவே பதிவு செய்தவர்களும், கலந்து கொள்ள விரும்புபவர்களும் அன்றைய திகதி மாலை 6 மணிக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்: சனிக்கிழமை 28.01.12
நேரம்: மாலை 6 மணி
இடம்: Brann stadion
தொடர்புகளுக்கு
தோமஸ் 91668547
பயஸ் 91713213
அனைத்து கழகங்களுடனான ஒன்றுகூடல்தமிழர் விளையாட்டுக்கழகத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கான, அனைத்து கழகங்களுடனான ஒன்றுகூடல் ஒன்றை எதிர்வரும் 18.01.2012 புதன் மாலை 7 மணிக்கு Gimleskole இல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து கழகங்களையும் கலந்து கொண்டு உங்களின் ஆக்கபூர்வமான கருத்துகளையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். இப்படிக்கு பேர்கன் தமிழர் விளையாட்டுக்கழகத்தின் வாழ்த்து
மான்புறும் மக்கள் கடந்த 10.12.2011 சனியன்று பேர்கன் ஈழத்தமிழர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் பேர்கனில் வசிக்கும் திரு.வித்தியேஸ்வர சர்மா இராதாகிருஸ்ண குருக்கள், சந்தோஸ்குமார் இராதாகிருஸ்ண குருக்கள் ஆகிய சகோதரர்கள் இருவரும் நோர்வே நாட்டின் தேசிய கிரிக்கட் அணிக்கு தெரிவானதை அடுத்து பேர்கன் தமிழர் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களிற்கான வாழ்த்துப்பாவையும், நினைவவு சின்னத்தையும் பேர்கன் தமிழ் சங்க தலைவரும், கடந்த 20 வருடங்களிற்கு மேலாக பேர்கன் தமிழர் விளையாட்டுக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவருமான திரு. யூயின் செபஸ்டியன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
Årlige felles møteவருடாந்த பொதுக்கூட்டம். தமிழர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 05/11/2011 சனி அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும். பேர்கன் வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் இதில் கலந்து கொண்டு தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். காலம். சனிக்கிழமை 05.11.2011
முதியோர்களுக்கான ஒன்றுகூடல்பேர்கனில் வசிக்கும் எமது முதியோர் மற்றும் ஒய்வுபெற்றோர்களின் நலன் கருதி அவர்களிற்கான பொழுது போக்கு அம்சங்களுடனான சந்திப்புகளையும்,ஒன்று கூடல்களையும், கிரமமான முறையில் நடாத்துவதற்கான ஆலோசனை பெரும் வகையில் இவர்களிற்கான சந்திப்பொன்றை தமிழர் விளையாட்டுக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது. இக்குழுவில் தங்களையும் இணைக்க விரும்புவோர் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். Informasjonபேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் இல் 27/28 augst 2011நடாத்தப்பட இருந்த போட்டிகள், சுபன் விளையாட்டுக்கழகம் கேட்டுக் கொண்டதற்கமைய வேறு ஒரு நாளிற்கு மாற்றம் செய்துள்ளோம். போட்டிகள் நடைபெறும் புதிய நாளை வெகு விரைவில் அனைவருக்கும் அறியத்தருவோம். Fotball og Volleyball turneringதமிழர் விளையாடுக் கழகத்தின் இவ்வாண்டிற்கான 2 வது விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் 28 மே அன்று நடைபெற இருக்கின்றது.28.05.11 சனிக்கிழமை - ஆண்கள், பெண்களுக்கான கரப்பந்தாட்டம்.சிறுவரகளுக்கான உதைபந்தாட்டம். காலம்: சனிக்கிழமை 28.05.2011
|