Get Adobe Flash player

TSK - Bergen

Bilder fra fotball/volleyball turnering

தமிழர் விளையாடுக் கழகத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது உள்ளரங்க விளையாட்டுக்கள் கடந்த 03.04.2011 ஞாயிறு அன்று Stemmemyran உள்ளரங்க மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பெண்கள், ஆண்களுக்கான கரப்பந்தாட்டம். ஆண்களுக்கான, சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம் என்பன மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Les mer …

 

Takk til alle som var med på dugnad

தமிழர் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டிற்கான நிதி சேகரிப்பின்  முதற் கட்டமாக பேர்கனில் உள்ள ஏனைய விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், ஓர் சிரமதான பணியொன்றை பங்குனி மாதத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு செவ்வனே நிறைவடைந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் நன்றிகளும் பாராட்டுக்களும்.

 

Medlems kontigent for 2011

பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின், இவ்வாண்டிற்கான முதலாவது உள்ளரங்க விளையாட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 2ம் 3ம் திகதிகளில் நடைபெற இருப்பதால், இவ்விளையாடுக்களில் கலந்து கொள்ளும் கழகங்கள் தமது இவ்வாண்டிற்கான சந்தாவை 250kr. கீழுள்ள வங்கி இலக்கதிற்கோ. அல்லது எமது நிர்வாக உறுப்பினர்களிடமோ செலுத்தி, எமது கழகத்தின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையிலும், ஒழுங்கான முறையிலும் செயற்படுத்த தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.

Bank konto Nr.: 3625.56.94590

 

Innendørsturnering Fotball/Volleyball

பேர்கன் தமிழர் விளையாடுக் கழகம் இவ்வருடத்திற்கான முதலாவது உள்ளரங்க உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட போட்டிகளை April 3 ஞாயிறு  அன்று நடாத்தவுள்ளோம்.  சிறுவர்கள், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம். ஆண்கள், பெண்களுக்கான கரப்பந்தாடம் இத்தினத்தில் நடைபெறும்.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் கழகங்கள் 28.mars.2011 முன் தங்களது கழகங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Søndag 03.april 2011  Kl:14.00
Fotball og Volleyball (Menn)
Fotball (Gutter)
Håndball (Jenter)
Volleyball (Kvinner)

Dato: 03. april 2011 søndag
Kl: Kl: 14.00
Sted: Stemmemyren

Påmeldingsfrist: 28.mars.2011

தொடர்புகளுக்கு
Thomas: 91668547, Pious: 91713213, Kannan. 90827208

போட்டிகள் குறித்த நேரத்தில் ஆரம்பமாகும் என்பதனை அறியத்தருகின்றோம்.

 

Møte referat [ med tidligere styremedlemmer ]

நோர்வே பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் 25 வருட நினைவை முன்னிட்டு, இக் கழகத்தின் வரலாறு தொடர்பான பதிவொன்றை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகக் குழு இக் கழகத்தின் ஆரம்ப கால நிர்வாக உறுப்பினர்களுடனும், இக்கழகத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஒரு சிலருடனும், ஒரு கலந்துரையாடலை 19.02.2011 அன்று மேற்கொண்டது.

Les mer …

 

Møtereferat [ med tamilske kvinner ]

பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் தமிழ் பெண்களுக்கான கரப்பந்தாட்ட பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் இது சம்பந்தமான கருத்துக்களை பகிரும் நிகழ்வு கடந்த 06.Mars.2011 அன்று Høyteknologisenter இல் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு தமது ஆக்க பூர்வமான கருத்துக்களை வெளியிட்டதுடன் இப்பயிற்சிகளிற்கு தமது பூரண ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

Les mer …

 

Volleyball trening starter for tamilske kvinner

பெண்களுக்கான கரப்பந்தாட்ட பயிற்சிகள் ஆரம்பம்.

பேர்கன் தமிழர் விளையாட்டுக்கழகம் மீண்டும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம். ஞாயிற்றுக்கிழமைகளில் 12 - 14 மணிவரை பயிற்சிகள் நடைபெறும்.

Les mer …