Get Adobe Flash player

Nyheter

Fotball/Volleyball Turnering

தமிழர் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம். (7 வயது - 12 வரை) என்பன எதிர்வரும் 23.11.2013 சனிக்கிழமை அன்று பிற்பகல் 15.00 மணிக்கு Nordneshall இல் நடைபெற இருப்பதால், இதில் பங்கு கொள்ளும் கழகங்கள் 96872739 என்ற கைத்தொலைபேசியில் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம். அத்துடன் சிறுவருக்கான உதைபந்தாட்டமும் இம்முறை சிறப்பாக நடைபெற இருப்பதால் மேற்குறிப்பிட்ட வயதெல்லையை உடைய சிறார்களின் பெற்றோரும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

 

மாபெரும் Cricket சுற்றுப்போட்டி பேர்கன்

மாபெரும் Cricket சுற்றுப்போட்டி பேர்கன்

தமிழர் விளையாட்டுக் கழகத்தின் 2012 ஆண்டிற்கான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 19.05.2012 அன்று Slettebakken மைதானத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது.
இச்சுற்றுப்போட்டி ஆனது Norway  ரீதியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் 5. mai 2012 முன் உங்களது அணிகளின் விபரங்களை தந்துதவி, இப்போட்டிகளை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடாத்துவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்கின்றோம்.

காலம்: சனி 19.05.2012
நேரம்: காலை 10 மணி
இடம்: Slettebakken மைதானம்

தொடர்பு. கண்ணன் 90827208
தமிழர் விளையாடுக்கழகம் பேர்கன்

 

நடைபெற்ற முதியோருக்கான இரண்டாவது சந்திப்பு

முதியோருக்கான இரண்டாவது சந்திப்பு கடந்த 25.02.2012 அன்று மாலை 6 மணிக்கு HIB இல் நடைபெற்றது.இதில் பெரும்பாலான முதியோர் கலந்து கொண்டனர். இன்று இந்நிகழ்விற்கு தொடர்பாளர்களாக திரு.தயா, திருமதி எலிசபெத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
திரு.தயா. 55296929
திருமதி எலிசபெத். 56334984

 

நடைபெற்ற முதலாவது விளையாட்டு நிகழ்வு

தமிழர் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது விளையாட்டு நிகழ்வு கடந்த 12.02.2012 சனி அன்று காலை 10 மணிக்கு நடை பெற்றது. இதில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம், சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம் பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம் என்பன நடைபெற்றன. இதில் பெரும்பாலான அணிகளும், சிறுவர்களும், பார்வையாளர்களும் கலந்து கொண்டு இந்நாளை சிறப்பித்தனர்.

 

நடைபெற்ற முதியோருக்கான ஒன்றுகூடல்

முதியோருக்கான ஒன்றுகூடல்

பேர்கனில் வசிக்கும் தமிழ் முதியோருக்கான ஒன்று கூடல் ஒன்றை தமிழர் விளையாட்டுக் கழகம் கடந்த 28.01.2012 அன்று Brann stadium இல் அமைந்துள்ள idrettsråd இன் கட்டிடத்தில் ஒழுங்கு செய்திருந்தது, இதில் முதியோர் சிலர் கலந்து கொண்டு தங்களின் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தமிழர் விளையாட்டுக்கழகத்திற்கு தெரிவித்ததுடன் மாதத்தில் ஒரு முறையாவது இவ்வாறான சந்திப்பை தொடர்ந்து ஒழுங்கு படுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன் தங்களின் பூரண ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

 

அனைத்து கழகங்களுடனான ஒன்றுகூடல்

அனைத்து கழகங்களுடனான ஒன்றுகூடல்

தமிழர் விளையாட்டுக்கழகம் 2012 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் நோக்கில் கடந்த 18.01.2012 அன்று மாலை 7 மணிக்கு Gimleskole வில் அனைத்து கழகங்களுடனான சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்து இருந்தது. இதில் பேர்கனில் இயங்கும் பெரும்பான்மையான விளையாடுக்கழகங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்தனர்.

 

முதியோர்களுக்கான ஒன்றுகூடல் 28.01.12

 

பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்படுள்ள முதியோர்களுக்கான ஒன்றுகூடல் 28.01.12 சனிக்கிழமை அன்று ஒழுங்கு செய்யப்படுள்ளது. இதில் கலந்து கொள்ள ஏற்கனவே பதிவு செய்தவர்களும், கலந்து கொள்ள விரும்புபவர்களும் அன்றைய திகதி மாலை 6 மணிக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலம்:  சனிக்கிழமை 28.01.12 
நேரம்: மாலை 6 மணி 
இடம்: Brann stadion

 

தொடர்புகளுக்கு

தோமஸ் 91668547 
பயஸ் 91713213

 

அனைத்து கழகங்களுடனான ஒன்றுகூடல்

தமிழர் விளையாட்டுக்கழகத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கான, அனைத்து கழகங்களுடனான ஒன்றுகூடல் ஒன்றை எதிர்வரும் 18.01.2012 புதன் மாலை 7 மணிக்கு Gimleskole இல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து கழகங்களையும் கலந்து கொண்டு உங்களின் ஆக்கபூர்வமான கருத்துகளையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
நிர்வாகத்தினர்.

 

பேர்கன் தமிழர் விளையாட்டுக்கழகத்தின் வாழ்த்து

 

மான்புறும் மக்கள்

கடந்த 10.12.2011 சனியன்று பேர்கன் ஈழத்தமிழர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் பேர்கனில் வசிக்கும் திரு.வித்தியேஸ்வர சர்மா இராதாகிருஸ்ண குருக்கள், சந்தோஸ்குமார் இராதாகிருஸ்ண குருக்கள் ஆகிய சகோதரர்கள் இருவரும் நோர்வே நாட்டின் தேசிய கிரிக்கட் அணிக்கு தெரிவானதை அடுத்து பேர்கன் தமிழர் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டார்கள்.

இவர்களிற்கான வாழ்த்துப்பாவையும், நினைவவு சின்னத்தையும் பேர்கன் தமிழ் சங்க தலைவரும், கடந்த 20 வருடங்களிற்கு மேலாக பேர்கன் தமிழர் விளையாட்டுக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவருமான திரு. யூயின் செபஸ்டியன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.

 

Les mer …

 
Flere artikler …